Varany Central College

Varany Central College

Student Counseling Service

1. கல்விசார் வழிகாட்டல்

நோக்கங்கள்

  • கற்றல் சார்பாக மாணவர்களின் ஊக்கல் நிலையை மேம்படுத்துதல்
  • விசேடகல்வித்தேவையுள்ள மாணவர்களை இனங்கண்டு உதவுதல்
  • உயர்கல்வியைத் தொடர்ந்து கற்கவும், கற்றலினை இடைநிறுத்தாமலிருக்கவும் ஆலோசனை வழங்குதல்.

செயற்பாடுகள்

  • பாடத்தெரிவுக்கு வழிகாட்டுதல்
  • மாணவர்களின் அடைவுமட்டம் மற்றும் பரீட்சைப்பெறுபேறுகளை உயரிய மட்டத்தில் பேனுவதற்காக உதவுதல்
  • பரீட்சையில் தோல்வியடையும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்
  • வரவு ஒழுங்கீனமான, தொடர்ந்து பாடசாலைக்குச் சமூமளிக்காத மாணவர்களை இனங்கண்டு விபரங்களைத் திரட்டுதலும் வழிகாட்டுதலும்
  • விசேட உதவி தேவைப்படும் மாணவர்களை இனங்கண்டு பட்டியற்படுத்துதல்
  • விசேட உதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உதவி வழங்க நடவடிக்கை எடுத்தல்
  • பல்வேறு கற்றல் சந்தர்ப்பங்கள் புலமைப்பரிசில்கள் போன்றவை தொடர்பாக அறிந்துகொள்ளக் களங்களை விரிவுபடுத்துதல்
  • விளம்பரப் பலகையினூடாக உயர்கல்வி தொடர்பான தகவல்கள் தரவுகள் என்பவற்றைக் காட்சிப்படுத்துதல்

2. தொழில்சார் வழிகாட்டல்

நோக்கங்கள்

  • தொழில் வாழ்க்கைக்கு ஆயத்தஞ் செய்ய மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
  • தொழில் வாழ்க்கைசார் சகல தரவுகளையும் மாணவர்களுக்குத் தெரிவித்தல்.

செயற்பாடுகள்

  • தொழில் ரீதியாக வழிகாட்டப்பட வேண்டிய மாணவர்களை இனங்கண்டு பட்டியற்படுத்துதல்
  • தொழில் ரீதியான கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துவதுடன், தொழிற்பயிற்சிக்கு மாணவர்களை ஊக்குவித்தல்
  • விளம்பரப் பலகையினூடாக தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி போன்ற தகவல்களைக் காட்சிப்படுத்துதல்

3. தனியாள் சார் வழிகாட்டுதல்

நோக்கங்கள்

  • தனியாளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆலோசனை வழங்குதல்.
  • மனவெழுச்சிச் சமநிலையைப் பேணுவதற்கு வழிகாட்டுதல் ஆலோசனை வழங்குதல்.
  • ஆரோக்கியமான உள சமூக நிலையினை மேம்படுத்துதல்.

செயற்பாடுகள்

  • துணை நாடியுடனான சந்திப்புக்கள்
  • சிக்கலான உடல் உளப்பிரச்சினைகள் உடைய மாணவர்கள் இருப்பின் மருத்துவர் உளமருத்துவர் ஆகியோரின் உதவிபெற ஏற்பாடு செய்தல்.
  • பெற்றோர் மற்றும் சமூக ஆதரவினைப் பெற்றுக்கொடுத்தல்.

4.சமூக வழிகாட்டல்

நோக்கங்கள்

  • சமூகம் சார்பான நல்ல மனப்பாங்குகளை விருத்தி செய்தல்
  • சமூக இசைவாக்கம் பெற உதவுதல்
  • சமூக முரண்நிலைகளை இனங்கண்டு அதனைத் தவிர்த்து சுமூகமான தொடர்புகளைப் பேண வழிகாட்டுதல்.

செயற்பாடுகள்

  • மனப்பாங்கு விருத்தி தொடர்பான கலந்துரையாடல்களினை, செயற்பாடுகளினை மேற்கொள்ளுதல்
  • பொருத்தமான கானொளிகளின் துணையுடன் பண்பாட்டு கலாசார சமூக விழுமியங்கள் பற்றிக் கலந்துரையாடுதல்.
  • பிரச்சினைகளை விழங்கிக்கொள்ளவும் தீர்மானமெடுக்கவும் அரங்கைப்பயன்படுத்துதல்.
  • மாணவர்களின் பல்வேறு ஆற்றல்களை ஊக்குவித்தல். (பாராட்டுதல், சான்றுதல் மற்றும் பரிசில்கள் வழங்குதல்)
  • பொருத்தமான களப்பயணங்களை ஒழுங்குசெய்து மாணவர்களை அழைத்துச்சென்று அனுபவங்களைப் பெற்றுக்கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல்.
  • பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துதல்.
  • சந்திப்புக்களை ஒழுங்கு செய்தல்.
  • ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுதல்.

5. பாடப்புறச் செயல் சார் வழிகாட்டல்

நோக்கங்கள்

  • ஒய்வு நேரத்தினை பயனுள்ள வகையில் கழிப்பதற்கான வசதி வாய்ப்புக்களை, சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் (மகிழகம்)
  • பாடசாலை வளங்களான நூல்நிலையம், மன்றங்கள், சங்கங்கள், விளையாட்டு போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவித்தல்.
  • வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பாலுள்ள ஏனைய பாடப்புறச் செயற்பாடுகளில், இணைப் பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல்.

செயற்பாடுகள்

  • ஆடல், பாடல், நடிப்பு, ஆக்கச்செயற்பாடுகளில் உரிய ஆசிரியர்களின் உதவியுடன் பயிலச் சந்தர்ப்பம் வழங்கல்.
  • மன்றங்களில் தம்மை அங்கத்தவராக இணைத்துக் கொள்ளவும் அதன் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தவும் ஊக்குவித்தல்.
  • பல்வேறு ஆக்கமுயற்சிகளில் மாணவர் ஈடுபட ஊக்குவித்தல்
    • இந்துவின் இளசுகள் என்ற அமைப்பினூடாக இசையில் ஆர்வமுள்ள மாணவர்களை இணைத்து பாடல் எழுதி, இசையமைத்து, ஒலிப்பதிவு செய்து, இறுவட்டாக வெளியீடு செய்ய உதவுதல்.
    • ஓளிப்படக் கலைக் கழகத்தினூடாக புகைப்படக்கண் காட்சியினை நடத்த ஊக்குவித்தல்
    • உளசமூக மேம்பாட்டுக் கழகத்தினூடாக செய்திப் பத்திரிகை ஒன்றினை வெளியீடு செய்தல்.
    • சிறுவர் செயற்பாட்டுக் கழகத்தின் ஊடாக பல்வேறு மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக் கொண்டுவரல்.
  • பெற்றோர் சந்திப்புக்களில் மாணவர் உளமேம்பாடு பற்றி அறிவுறுத்துதல்.

6. உடல் நலம் சார் வழிகாட்டல்

நோக்கங்கள்

  • மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களின் உடல் ஆரோக்கியம் போசாக்கு தடுப்புமருந்தேற்றம் போன்றவற்றின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துதல்.
  • போதைப்பொருள், புகைபிடித்தல் போன்ற தீயபழக்கங்களின் விளைவுகளை மாணவர்களுக்கு உணர்த்துதல்.

செயற்பாடுகள்

  • இனங்காணப்பட்ட படிவங்களினூடாக உடல், உளத் தேவைகளையுடைய மாணவர்களை இனங்கண்டு சிகிச்சை பெற அல்லது ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்தல். சிபாரிசு செய்தல்.
  • வைத்திய அதிகாரிகளின் உதவியுடன் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களினை நடத்த ஏற்பாடு செய்தல்.

7. அறநெறி சார் வழிகாட்டல்

நோக்கங்கள்

  • மன இறுக்கத்தைப் போக்குவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளல்.
  • மன ஒன்றிப்பினூடாக குறித்த இலக்கு நோக்கி வழிப்படுத்தல்

செயற்பாடுகள்

  • சாந்த வழிமுறைப் பயிற்சிகளில் ஈடுபடுத்துதல்
  • கவின் கலைகளில் ஈடுபடுத்துதல்.
  • தியானம் யோகா போன்ற மன ஒன்றிப்புக்கான இறுவட்டுக்களை மாணவர்களுக்குக் காட்டி கலந்துரையாடுதல்

குறிப்பு:
வழிகாட்டலும் ஆலோசனையும் தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்ட அல்லது உத்தேசிக்கப்பட்ட செயற்பாடுகள் கால சூழ்நிலைகளுக்கேற்ப பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்படலாம். இம்மாற்றங்கள் அதிபரின் அனுமதியோடு மீள வடிவமைக்கப்படும்.

வழிகாட்டல் ஆலோசனைச் சேவையினை மேற்கொள்ளும் இடம் மகிழகம் என்னும் பெயரால் அழைக்கப்படும்.
மாணவர்கள் சுதந்திரமாக இங்கு வந்து தமது ஆற்றல்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளக் கூடிய வகையிலும் உளநலத்தை வளர்த்துக்கொள்ளக் கூடிய வகையிலும் அமைந்த கருவிகள் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்..