Varany Central College

News

யா/ வரணி மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர சிறப்பான பெறுபேறுகள் -2024(2025)
10Nov

யா/ வரணி மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர சிறப்பான பெறுபேறுகள் -2024(2025)

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த பெறுபறுகளைப் பெற்ற எமது மாணவச் செல்வங்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன் அவர்களை வழிப்படுத்திய கல்லூரியின் ஆசிரியர்குழாமிற்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றது கல்லூரிச்சமூகம் .

குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம்  அன்பளிப்பு
10Nov

குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் அன்பளிப்பு

எமது கல்லூரியில் மாணவர்களின் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை மனித நேயநம்பிக்கை நிதியத்தினர் அன்பளிப்புச் செய்ததுடன் அதனை பொருத்தி மாணவர் பாவனைக்காக 06.11.2025 அன்று அங்குரார்ப்பணம் செய்துதந்திருந்தனர். இந்நிதியத்தினர்க்கு கல்லூரிச்சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது கல்லூரியின் புதிய அதிபர் திரு.இ.கோகுலராகவன்
30Sep

எமது கல்லூரியின் புதிய அதிபர் திரு.இ.கோகுலராகவன்

கல்லூரியின் தற்போதய அதிபராக திரு.இ.கோகுலராகவன் அவர்கள் 07.02.2025 அன்று கடமையேற்றுள்ளார். அவர்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவைவேண்டி வரவேற்கின்றனர் கல்லூரி சமூகத்தினர்,பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள்

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு – 2025
26Feb

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு – 2025

கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது கல்லூரியின் அதிபர் தலைமையில் 25.02.2025 அன்று இடம்பெற்றது.நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும் வெளிவிவகார அமைச்சு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் சிரேஸ்ட உதவிச் செயலாளருமாகிய திரு.க.நிகரில்காந் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி – 2025

கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிநிகழ்வு நேரலை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது்

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் தினாய்வுப் போட்டி – 2025

பரிசில் நாள் – 2025
08Feb

பரிசில் நாள் – 2025

கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான பரிசில் நாள் நிகழ்வும், “வருணி” வருடாந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் 24.01.2025 அன்று பிரதி அதிபர் திரு . தெ. செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது .இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் மதிப்பார்ந்த…

சிறப்புத்தேர்ச்சி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு
29Jan

சிறப்புத்தேர்ச்சி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

ஒவ்வொரு தவணையும் தவணைப்பரீட்சை நிறைவடைந்த பின்னர் இடம்பெறும் தேர்ச்சி அறிக்கை வழங்கப்படும் நிகழ்வில் குறித்த தவணையில் வகுப்பு ரீதியாக அதிஉயர் சராசரிப்புள்ளி பெறும் மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். இந்நிகழ்விற்கான பூரண அனுசரணையை கல்லூரியின் 2007O/L & 2010A/L பழையமாணவர் அணியினர்…

கல்லூரியில் இடம்பெற்ற பொங்கல் விழா – 2025
29Jan

கல்லூரியில் இடம்பெற்ற பொங்கல் விழா – 2025

2025 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வானது 17.01.2025 வெள்ளிக்கிழமை அன்று பிரதி அதிபர் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் இணைந்து கொண்டாடப்பட்டது.

யா/வரணி மத்திய கல்லூரியின் க.பொ.த.உயர்தரப்பரீட்சை – 2022(2023) முன்னணிப் பெறுபேறுகள்
04Sep

யா/வரணி மத்திய கல்லூரியின் க.பொ.த.உயர்தரப்பரீட்சை – 2022(2023) முன்னணிப் பெறுபேறுகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் – 2022(2023) சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், அவர்களை வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும்தெரிவிப்பதோடு,கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பக்கபலமாக விளங்கும் பழைய மாணவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள். இப்பெறுபேறானது கல்விப் பணியிலே 70 ஆண்டுகளை நிறைவுகாணவுள்ள கல்லூரி அன்னையின்…

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடத் தொகுதி அன்று (17.05.2023) திறந்து வைக்கப்பட்டது.
04Aug

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடத் தொகுதி அன்று (17.05.2023) திறந்து வைக்கப்பட்டது.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடத் தொகுதி அன்று (17.05.2023) திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்தகுமார் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் யாழ்…