Varany Central College

Varany Central College

Rules And Regulations

பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிமுறைகள்

பாடசாலை வளாகத்தினுள் உள்நுழைதல் மற்றும் பொது விதிமுறைகள்.
  • தினமும் காலை7:30 மணிக்கு பாடசாலை ஆரம்பமாகும். எனவே அனைத்து மாணவர்களும் 7.15 ற்கு முன்பாக கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.
  • 7:30 மணிக்கு பிந்தி வரும் மாணவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் பிந்தி வருமிடத்து தந்தை அல்லது தாயுடன் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.
  • முன் அனுமதியின்றி பாடசாலைக்கு சமுகம் தராத மாணவர்கள் அதற்கான காரணத்தை பிரத்தியேக கொப்பியொன்றில்
    பதிந்து பெற்றோர் கையொப்பம் இடல் வேண்டும்.
  • 3 நாட்கள் தொடர்ச்சியாக வராத மாணவர்கள் பெற்றோரை அழைத்து வர வேண்டும்.
பாடசாலை சீருடை மற்றும் பொது விதிமுறைகள்
  • மாணவர்கள் சீருடை மற்றும் தலைமுடி ஒழுங்கமைப்பு காலணி ஆகியன கல்லூரி விதிமுறைக்கு அமைய இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுவர்.
வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியில் செல்லுதல்.
  • வகுப்பறையில் இருந்து மாணவர்கள் தேவையற்ற வகையில் வெளியில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
  • வெளியில் செல்ல தேவை ஏற்படுமிடத்து மாணவர் ஒருவர் மட்டும் செல்லல் வேண்டும்.
  • வகுப்பறையில் இருந்து வேறு பாடத்திற்கு மாணவர்கள் செல்லும் போது ஒழுங்காக வரிசையில் செல்லல் வேண்டும்.
  • வகுப்பறையில் மாணவர்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.
  • இடைவேளையின் போது மாணவர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே செல்லல் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மற்றும் வகுப்பறைச் சுத்தம்
  • வகுப்பறை சுத்தம் மற்றும் வகுப்பறை சுற்றாடல் சுத்தம் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
  • பொது நடத்தை பாடசாலை நிகழ்வுகளில் ஒழுங்காகப் பங்குபற்றல், அமைதி பேணுதல் என்பதைக் கடைப்பிடிப்பதுடன் ஏனைய வெளிப்பாடசாலை நிகழ்வுகளிலும் பாடசாலையின் கௌரவத்தை முழுமையாக உயர்த்துவதுடன் தங்களின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும்.
வசதிகள் சேவைக்கட்டணம்
  • மாணவர்கள் வசதிகள் சேவைகள் கட்டணத்தை முதல் தவணையிலேயே செலுத்துதல் பயனுடையதாகும்.
வருகை தருணர்கள்
  • எந்தவொரு தருணத்திலும் அனுமதியில்லாமல் எந்தவொரு காரணத்திற்காகவும் எந்தவொரு நபரும் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் .
  • வருகை தரும் எந்தவொரு நபரும் பொருத்தமான ஆடைகள் அணிந்து மட்டுமே பாடசாலைக்Fள் வரவேண்டும். (கவனக் கலைப்பை ஏற்படுத்தும் வகையில் ஆடைகள் அணிதலாகாது)
மாணவர் வரவும், பரீட்சைகளும்
  • பரிட்சைக்கு தோற்றுவதற்க , பாடசாலைக்கு 80 % வரவினைக் கொண்டிருக்க வேண்டும் .
  • ஒவ்வொரு தவணை முடிவின் போது, நடத்தப்படும் பெற்றோர் , ஆசிரியர் , மாணவர் சந்திப்புக் கூட்டத்திற்கு அனைவரும் சமுகமளிக்கல் வேண்டும் .
  • மாணவர் எவராவது புறக்கிருத்திய ,ணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்கேற்கும் போது வகுப்பறை அறிக்கைப் புத்தகத்தில் வகுப்பாசிரியரினால் முறைப்படி பொருத்தமான பக்கத்தில் குறிப்பிட்ட நடத்தை பற்றிய விவரத்தைப் பதிவு செய்வதுடன் , மாணவர் அறிக்கைப் புத்தகத்திலும் அதனைப்பதிவு செய்ய வேண்டும்
கல்லூரிச் சுற்றுலா
  • சுற்றுலா செல்ல விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதிக் கையொப்பங்கள் பெற்றிருத்தல் அவசியமாகும். 
இணைபாடவிதான, புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பங்குபற்றல்
    • பாடசாலையில் நடைபெறும் விளையாட்டுக்கள், ஏனைய புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றதுஅவ்வாறான சந்தர்ப்பங்களில் பாடசாலைக்குரிய சீருடையோ அல்லது அந்தத் துறைக்குப் பொறுப்பான ஆசிரியரினால் விதந்துரைக்கப்படும் சீருடையே அணிதல் வேண்டும்.
    • பாடசாலைக்குவெளியேநடைபெறுகின்ற இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் பங்கேற்க முன்பு அதிபரின் அனுமதியை எழுத்து மூலம் பெற்றிருப்பதோடு, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆசிரியருடன் சேர்ந்தே மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.
    • பாடசாலையின் கௌரவத்தினையும், நற்பெயரையும் , புனிதத்தையும் பாதுகாத்தல் ஒவ்வொரு மாணவரினதும் கடமையாகும் . இவற்றுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மாணவர்கள் நடந்து கொண்டால் நிர்வாகத்தினால் ஒழுக்காற்று
      நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள் .
    • பாடசாலைக்கு வெளியே விளையாட்டுக்கள், ஏனைய போட்டிகள் போன்ற புறக்கிருத்திய வேலைகளில் ஈடுபடும்போது வரணி மத்திய கல்லூரிக்குரியக்குரிய பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும் . 
    • மாணவர்களாகிய உங்களது நடத்தையும், சொற்களும் மிகவும் பண்புள்ளவையாக அமைதல் வேண்டும் . நீங்கள் வரணி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது . மாணவர்களாகிய உங்களது சொற்களாலோ செய்கையாலோ பிறர் மனதைத் துன்புறுத்தாத வகையில் நடக்க வேண்டும் . 
    • பாடசாலை நாட்களில் 80 சதவீதத்திற்கு மேல் வருகையுள்ள மாணவர்களே பாடசாலைக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறமுடியும்.
    • எல்லாப் பயிற்சியாளர்களும் பயிற்சி முடிந்தவுடன் பாடசாலைச் சுற்றுச் சூழலில் இருந்து வெளியேறுவதுடன் எவ்வளவு விரைவாக வீடுகளைச் சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றடைய வேண்டும். 
    • மன்ற , கழக , சங்கங்களின் தலைவர்கள் தமது ஆண்டறிக்கையை வருட எல்லைக்குள் அதிபருக்கு சமர்ப்பித்தல் வேண்டும் .
    • அனைத்து வரணி மத்திய கல்லூரி சர்வதேச பிரதிநிதிகளும் நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே அதிபரின் முன் அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதுடன் , கல்வி அமைச்சின் கல்வி அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றிருத்தல் வேண்டும். 
    • இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குபற்றுவதற்குப் பொருத்தமான விளையாட்டு வீரர்கள் வேறு ஏதாவது காரணத்தினால் குறித்த நாளில் விளையாட்டுக்களில் பங்குபற்ற முடியாவிடில் அதற்கான காரணமடங்கிய கடிதத்தைப் பொறுப்பாசிரியரிடம் ஒரு கிழமைக்கு முதல் கையளித்தல் வேண்டும் . அவ்வாறு கையளிக்காத மாணவர்கள் தொடர்ந்து வரும் காலங்களில் பாடசாலை சார்பாக விளையாட்டுக்களில் தொடர்ந்து பங்கெடுக்கும் வாய்ப்பு முற்றாகத் தடைசெய்யப்படும். 

    midj;J புறக்கிருத்திய செயற்பாடுகள் , விளையாட்டுக்க பி.ப 6.0  மணிக்கு நிறைவு செய்யப்படல் வேண்டும் . 6.00மணிக்குப் பின் பாடசாலை வளாகத்துக்கள் மாணவர்கள் நடமாட முடியாது.

விளையாட்டு நடவடிக்கைகள்
  • பாடசாலை விளையாட்டுக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களினது பாடசாலை வருகை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்படும். 
  • மாணவர்களின் 80% ஆன வருகையினை காலை நேர வகுப்பறைப் பதிவினூடாகவும் இவ்வரவு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் . மேற்படி முறையான வருகையைப் பதிவு செய்து கொள்ளாத எந்தவொரு மாணவரும் பாடசாலை சார்பாகவோ பயிற்சிகளிலோ ஈடுபடமுடியாது . 
  • காலையில் கல்லூரிக்கு வருகை தந்த மாணவர்களே பிற்பகல் நடைபெறக்கூடிய விளையாட்டு நடவடிக்கைகளில் பங்குபற்றலாம். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் தமது ஒழுக்கம், வருகை ஆகியன தொடர்பாக வகுப்பு ஆசிரியர்களின் சிபார்சினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
பாடசாலை ஒழுக்காற்று விதிமுறைகள்
  • விதிமுறைகளுக்கு மாறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் உரிய விசாரணையின் பின்னர் பாடசாலையில் இருந்து ஒழுக்காற்று நடவடிக்கையின் நிமித்தம் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இடைநிறுத்தப்படுவர். காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டு பாடசாலையில் இருந்து நீக்கப்படுவார்கள்.