Varany Central College

Varany Central College

Facilities

  • வரணி மத்திய கல்லூரியில் ஆறு smart board காணப்படுகின்றன.
  • கல்வி அமைச்சின் GEM Project ஊடாக இரண்டு smart board கள் வழங்கப்பட்டன. ஏனைய நான்கு smart board களும் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பினால் பொருத்தப்பட்டவை ஆகும்.
  • 08.2022 அன்று பழைய மாணவர்கள் திரு.க.அதீதன் , திரு.க.சிவகுமார் ஆகியோரின் நிதிப்பங்களிப்பினால் க.பொ.த (உ/த) இரசாயனவியல் வகுப்பறைக்கு smart board அன்பளிப்புச் செய்யப்பட்டது.
  • 2022 செப்டம்பரில் ஆங்கிலக் கல்வியை விருத்தி செய்யும் முகமாக கல்வி அமைச்சினால் ஆங்கிலக் கல்வி வகுப்பறைக்கு smart board ஒன்று வழங்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
  • 11.2022 அன்று பழைய மாணவர் திருமதி.சிவதர்சினி சிவகுமார் அவர்களினால் இடைநிலைப் பிரிவு விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு smart board உபகரணத் தொகுதி பூட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்து தந்திருந்தது.
  • 11.2022 அன்று பழைய மாணவர் திரு.சிவராஜா ராஜ்குமார் (கனடா) அவர்களினால் ஏனைய பாடங்களுக்கான கற்பித்தல் செயற்பாட்டில் பயன்படுத்துவதற்காக smart board உபகரணத் தொகுதி ஒன்று பூட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பழைய மாணவர் சங்கம் , வரணி ஒன்றியம் கனடா ஆகியன ஏற்பாடு செய்து தந்துள்ளன.
  • டிசம்பர் மாதம் கல்வி அமைச்சின் GEM Project இன் ஊடாக ஆங்கிலக் கல்விப் பிரிவிற்கும் இடைநிலை கணிதப் பிரிவிற்குமான மொத்தம் இரண்டு smart board கள் வழங்கப்பட்டுள்ளன. இவையும் பயன்பாட்டில் உள்ளன.
  • 1967ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வித்தியாலய வளவில் விசாலமான ஒரு விளையாட்டு மைதானம் கல்வி இலாகாவினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
  • 1987 – 1988 வரையான காலப்பகுதியில் அதிபராக இருந்த திரு.சி.துரைராசா அவர்களால் காடுகளாகக் காணப்பட்ட விளையாட்டு மைதானம் புனரமைப்புச் செய்யப்பட்டது.
  • 1998 – 2003 வரையான காலப்பகுதியில் இக் கல்லூரியின் அதிபராக இருந்த திரு.ந.நவரட்ணராஜா அவர்கள் பாடசாலை மைதானத்தின் விஸ்தரிப்பிற்கு காத்திரமான முயற்சிகளை எடுத்து யாழ் மாவட்டத்திலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய பாரிய விஸ்தீரணம் கொண்ட மைதானமாக மாற்றி அமைத்தார்.
  • இம் மைதானமானது 400M ஓடுபாதையை கொண்டு விளங்குகின்றமை சிறப்புக்குரியதாகும்.
  • திரு.ந.நவரட்ணராஜா அதிபர் அவர்கள் வரணி மத்திய கல்லூரியின் மைதானத்தை விஸ்தீரணப்படுத்தியதன் பேறாகவே இன்று தென்மராட்சி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் அங்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • மாணவர்கள் தமது விளையாட்டுத் திறனை மேம்படுத்தி நாட்டின் சிறந்த வீர , வீராங்கனைகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான பௌதீக வளங்கள் ஓரளவுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

  • 400M ஓட்டப்பாதை
  • வலைப்பந்தாட்ட திடல்
  • கூடைப்பந்தாட்ட திடல்
  • இக் கல்லூரியில் ஆரம்பத்தில் ஒரு வகுப்பறையே ஒரு நூலகமாக தொழிற்பட்டு வந்தது. பிற்பட்ட காலத்திலே குறிப்பாக 2012ம் ஆண்டு இசுறுபாயத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் ஒரு தொகுதியிலேயே மாணவர்களின் நிறைவான பாவனைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு நிரந்தரமான நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
  • இது இக் கல்லூரியினுடைய ஒரு பொது நூலகமாகக் காணப்படுகின்றது.
  • இந் நூலகமானது மாணவர்களின் அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் நோக்குடனும் , வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்டதாகும்.
  • இங்கே கலை , அரசியல் , ஆன்மீகம் , பொருளாதாரம் , வரலாறு , பொது அறிவு சார்ந்த நூல்கள் என பலதரப்பட்ட நூல்கள் காணப்படுகின்ற அதேவேளை தினசரி நாளிதழ்களும் காணப்படுகின்றன.
  • இந் நூலகத்தில் காணப்படும் நூல்களானவை மாணவர்கள் யதார்த்த உலக நடைமுறைகளை விளங்கி தமது எதிர்கால இலட்சியங்களை அடைவதற்கான உந்துசக்தியைக் கொடுப்பனவாக காணப்படுகின்றன.
  • ஆரோக்கியத்துடனும், மனமகிழ்வுடனான பிள்ளைகளே வெற்றியினதும் , சாதனையினதும் உடமையாளர்கள் என்பதனால் இக் கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் மனமகிழ்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றது.

          அந்த வகையில் எமது கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட வசதிகளாக,

  • சுத்தமான குடிநீர்
  • மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படும் மலசலகூடங்கள்.
  • விபத்துகளின் போதான அவசர முதலுதவி அறை
  • வருடத்தில் ஒருமுறையாவது அனைத்து மாணவர்களினதும் உடல் ஆரோக்கியம் மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை , சிகிச்சை என்பன வழங்கப்படுகின்றது.
  • அரசாங்கத்தின் மருத்துவக் காப்புறுதி
  • மரங்களை வளர்ப்பதன் மூலம் இயற்கை காற்றை மாணவர்கள் சுவாசிப்பதற்கான வசதி.

 

  • பாடசாலை ஆரம்பிக்கும் தருணத்திலும் , முடிவுறும் தருணத்திலும் மாணவர்கள் வீதியைக் கடந்து வருவதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி ஆசிரியர் குழு , பயிற்றுவிக்கப்பட்ட மாணவர் குழு என்பன பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றது.
  • இக் கல்லூரியிலே பௌதீகவியல் , இரசாயனவியல் , உயிரியல் , மனைப்பொருளியல் ஆகிய உயர்தர வகுப்பினருக்கான ஆய்வுக்கூடங்கள் காணப்படுவதோடு தொழில் நுட்ப ஆய்வு கூடத்திலே இரண்டு மொழியியல் ஆய்வு கூடங்களும் , தகவல் தொழில்நுட்ப மற்றும் கணித ஆய்வு கூடமும் அமைந்துள்ளது. மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடமும் , பொதுவான விஞ்ஞான ஆய்வு கூடமும் அமைந்து காணப்படுகின்றது.

 

  • உயிரியல் ஆய்வுகூடம் - 01
  • பௌதீகவியல் ஆய்வுகூடம் – 01
  • இரசாயனவியல் ஆய்வுகூடம் – 01
  • தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் – 02
  • மொழியியல் ஆய்வுகூடம் - 02
  • விஞ்ஞான ஆய்வுகூடம் -  01
  • கணித ஆய்வுகூடம் -  01
  • மனைப்பொருளியல் ஆய்வுகூடம் -  01