Varany Central College

News & Update

யா/ வரணி மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர சிறப்பான பெறுபேறுகள் -2024(2025)

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த பெறுபறுகளைப் பெற்ற எமது மாணவச் செல்வங்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன் அவர்களை வழிப்படுத்திய கல்லூரியின் ஆசிரியர்குழாமிற்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றது கல்லூரிச்சமூகம் .

யா/ வரணி மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர சிறப்பான பெறுபேறுகள் -2024(2025) Read More »

குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் அன்பளிப்பு

எமது கல்லூரியில் மாணவர்களின் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை மனித நேயநம்பிக்கை நிதியத்தினர் அன்பளிப்புச் செய்ததுடன் அதனை பொருத்தி மாணவர் பாவனைக்காக 06.11.2025 அன்று அங்குரார்ப்பணம் செய்துதந்திருந்தனர். இந்நிதியத்தினர்க்கு கல்லூரிச்சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் அன்பளிப்பு Read More »

பாடசாலைக்கு 400,000.00 பெறுமதியான புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO plant)மனித நேய நம்பிக்கை நிதியம் -மன்னார்!

பாடசாலைக்கு 400,000.00 பெறுமதியான புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO plant)மனித நேய நம்பிக்கை நிதியம் -மன்னார்! Read More »

திரு.இ.கோகுலராவன்

எமது கல்லூரியின் புதிய அதிபர் திரு.இ.கோகுலராகவன்

கல்லூரியின் தற்போதய அதிபராக திரு.இ.கோகுலராகவன் அவர்கள் 07.02.2025 அன்று கடமையேற்றுள்ளார். அவர்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவைவேண்டி வரவேற்கின்றனர் கல்லூரி சமூகத்தினர்,பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள்

எமது கல்லூரியின் புதிய அதிபர் திரு.இ.கோகுலராகவன் Read More »

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு – 2025

கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது கல்லூரியின் அதிபர் தலைமையில் 25.02.2025 அன்று இடம்பெற்றது.நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும் வெளிவிவகார அமைச்சு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் சிரேஸ்ட உதவிச் செயலாளருமாகிய திரு.க.நிகரில்காந் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு – 2025 Read More »

பரிசில் நாள் – 2025

கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான பரிசில் நாள் நிகழ்வும், “வருணி” வருடாந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் 24.01.2025 அன்று பிரதி அதிபர் திரு . தெ. செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது .இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் மதிப்பார்ந்த திரு. லட்சுமணன் இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கடந்த வருட கல்லூரியின் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கடந்த ஆண்டின் கல்லூரி நிகழ்வுகளின் தொகுப்பான “வருணி” வருடாந்த சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பரிசில் நாள் – 2025 Read More »

சிறப்புத்தேர்ச்சி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

ஒவ்வொரு தவணையும் தவணைப்பரீட்சை நிறைவடைந்த பின்னர் இடம்பெறும் தேர்ச்சி அறிக்கை வழங்கப்படும் நிகழ்வில் குறித்த தவணையில் வகுப்பு ரீதியாக அதிஉயர் சராசரிப்புள்ளி பெறும் மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். இந்நிகழ்விற்கான பூரண அனுசரணையை கல்லூரியின் 2007O/L & 2010A/L பழையமாணவர் அணியினர் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை பரீ்ட்சை நிறைவுற்று அதற்கான தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு 20.01.2025 கல்லூரியின் பிரதி அதிபர் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் தவணைக்கான சிறப்பு தேர்ச்சி சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.இந்நிகழ்வானது மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது ஏனெனில் சில வகுப்புக்களில் ஒவ்வொரு தவணையிலும் இவ்விருதை வெவ்வேறு மாணவர்கள் தமதாக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில் அவ் அணியினருக்கு கல்லூரி சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சிறப்புத்தேர்ச்சி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு Read More »

கல்லூரியில் இடம்பெற்ற பொங்கல் விழா – 2025

2025 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வானது 17.01.2025 வெள்ளிக்கிழமை அன்று பிரதி அதிபர் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் இணைந்து கொண்டாடப்பட்டது.

கல்லூரியில் இடம்பெற்ற பொங்கல் விழா – 2025 Read More »

யா/வரணி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசில் நாள் நிகழ்வு எதிர்வரும் 24.01.2025 அன்று கல்லூரியின் பிரதி அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

யா/வரணி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசில் நாள் நிகழ்வு எதிர்வரும் 24.01.2025 அன்று கல்லூரியின் பிரதி அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது. Read More »

யா/வரணி மத்திய கல்லூரியின் க.பொ.த.உயர்தரப்பரீட்சை – 2022(2023) முன்னணிப் பெறுபேறுகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் – 2022(2023) சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், அவர்களை வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும்தெரிவிப்பதோடு,கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பக்கபலமாக விளங்கும் பழைய மாணவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள். இப்பெறுபேறானது கல்விப் பணியிலே 70 ஆண்டுகளை நிறைவுகாணவுள்ள கல்லூரி அன்னையின் கல்விப்புல வரலாற்றுச் சாதனையின் புதிய அத்தியாயமாக விளங்குவதையிட்டு மகிழ்வடைகிறது கல்லூரிச்சமூகம்.

யா/வரணி மத்திய கல்லூரியின் க.பொ.த.உயர்தரப்பரீட்சை – 2022(2023) முன்னணிப் பெறுபேறுகள் Read More »