Varany Central College

Author name: varany college

69 வது ஸ்தாபித தினமும் பரிசில் நாள் நிகழ்வும்

வரணி மத்திய கல்லூரியின் 69 வது ஸ்தாபித தினமும் பரிசில் நாள் நிகழ்வும் 11.01.2023 அன்று முதல்வர் திரு.ஆ.தங்கவேலு அவர்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. சுட்டிபுரம் அம்பாள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.இ.குமாரசாமிக்குருக்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான நிகழ்வில். பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களும்இ சிறப்பு விருந்தினர்களாக பழையமாணவரான திருகோணமலை மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.நாகலிங்கம்கோவிந்தராஜன் அவர்களும்இ பழைய மாணவரான பேராசிரியர்.செல்லையா.சிவராஜசிங்;கம் அவர்களும் கலந்து கொண்டனர். பழைய மாணவர்சங்க ஏற்பாட்டில் கல்லூரிக்கான இணையத்தளம் ஒன்று பேராசிரியர் செ.சந்திரசேகரம் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ‘வருணி’ வருடாந்த சஞ்சிகை ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி.பாலாம்பிகை.சிவகுமார் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலுக்கான வெளியீட்டுரையினை ஆசிரிய ஆலோசகர் திரு.வே.உதயகுமார் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் ஓய்வுநிலை அதிபர்கள்இ அயற்பாடசாலை அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ பழைய மாணவர்கள் பெற்ரோர்கள்இ நலன்விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் இணையவழியில் இணைந்திருந்தனர்.

69 வது ஸ்தாபித தினமும் பரிசில் நாள் நிகழ்வும் Read More »

மலசல கூடத்தொகுதி சீரமைப்பு

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திருமதி ரேனுகா சிவபாலன் அவர்களது நிதி பங்களிப்பில் ‘வன்னி கோப்’ மலசல கூடத்தொகுதியினை சீரமைத்து 21.12.2022 அன்று கையளிக்கப்பட்டது.

மலசல கூடத்தொகுதி சீரமைப்பு Read More »

உயர்தர வர்த்தகப்பிரிவு வகுப்பு கட்டிடம் சீராக்கம்

உயர்தர வர்த்தகப்பிரிவு வகுப்பு கட்டிடம் சீராக்கம்.- ஆறுமுகம் விநாயகமூர்த்தி(பழைய மாணவர்)

உயர்தர வர்த்தகப்பிரிவு வகுப்பு கட்டிடம் சீராக்கம் Read More »