Varany Central College

Varany Central College

Anthem

பாடசாலை கீதம்

உதய சூரிய நாமே நம் வாழ்வினிலே
இதய கல்லூரி நிறைந்த அறிவுதரும்
(உதய சூரிய)

ஞானத்திலே உயர் அறிவினிலே-புகழ்
சீலத்திலே வாழ்வு சிறுவர் களித்திடுவோம்
(உதய சூரிய)

பாடலிலே கலை தேடலிலே மேடை
ஆடலிலே நன்மை நாடலிலே உண்மை
ஓடலிலே மலை இயல்பினிலே தீமை
சாடலிலே மத்திய கல்லூரி இதாம் என்றும்
(உதய சூரிய)
 
நெல் விளைகின்ற பேர் நிலத்தினில் வாழுநற்
செல்வமதாய் மிகச்சீர் பெறு கழகமாய்
நல்வினை பல செய்யும் நம் மத்திய கல்லூரி
 
தரணியில் வளர்பிறை தானென வளர்வது
வரணி அரசினர் வளர் கலாசாலையே
உயர்வு கொள் மனத்துடன் உத்தமராய் நின்று
பரவுகின்றோம் எங்கள் பண்பு கொள் தாயே
(உதய சூரிய)

தமிழ் தாய் வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் மறிந்து
வளர்மொழி வாழியவே!