Varany Central College

About Us

HISTORY

வரணி மத்திய கல்லூரியின் உருவாக்கம்

இவ் இணையத்தளமானது பாடசாலை நிர்வாகத்தின் ஒப்புதலுடனும்,பழைய மாணவர்களின் பங்களிப்புடனும் நிகழ்கால,எதிர்கால நன்னோக்கோடு ஜனவரி 2023 உருவாக்கப்பட்டது.மேலும் இப் பாடசாலை வளர்ச்சிக்கு உதவி செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாடசாலைச் சமூகம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

உலகை மாற்றியமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியாகும். அதுவே ஒருவரது உள்ளத்தையும் அறிவினையும் பண்படுத்தும் மாபெரும் சக்தியாக விளங்குகின்றது. ஆரம்பகால கல்வியின் நோக்கங்கள் ஒழுக்கத்தையும் சமூக விழுமியங்களையும் மையமாகக் கொண்டே அமைந்தன. ஆனால் இன்றைய தசாப்த கல்வியானது பரந்துபட்ட நோக்கஙக்ளை உடையதாகக் காணப்படுகின்றது. அதாவது வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் அடிப்டையிலும் தொடர்பாடல் தேவைகளுக்கு ஏற்ப தனியாள் விருத்திஇ சமூக விருத்திஇ தொழில் விருத்தி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்வியின் நோக்கங்கள் வரையறுக்கப்படுகின்றன. இவ் நோக்கங்களை நிறைவேற்றும் வினைத்திறன் கொண்டவர்களையும்இ நாட்டிற்கான நற்பிரஜைகளையும் உருவாக்குகின்ற பயணத்தில் யா/வரணி மத்திய கல்லூரியானது பல தடைகளையும் தாண்டி இன்று இலக்குகளை அண்மித்து செயற்பட்டு வருகின்றது.
சாம்பல் மேட்டில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போன்று வரலாற்றில் இடம் பிடித்த சில இழப்புக்களில் இருந்து மீண்டெழுந்து காலத்திற்கேற்ப தர ரீதியில் மேம்பட்டு வரும் ஒரு கல்லூரியாக இக் கல்லூரி திகழ்கின்றது.
இக் கல்லூரியானது அதன் உருவாக்கத்திலே நல்ல கனதியான காரணத்தையும் சிறப்பான திட்டமிடலையும் ஏற்றத்தாழ்வற்ற சமூக நோக்கினையும் கொண்டதாக அமைகின்றது.
வரணியின் கலங்கரை விளக்காக விளங்கும் யா/வரணி மத்திய கல்லூரியானது தரம் 1-13 வரையான வகுப்புக்களைக்கொண்டதாக 40மாணவர்களுடனும் 05 ஆசிரியர்களுடனும் ஆரம்பமானது. 2010 ம் ஆண்டு இசுறுப்பாயத்திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டு தரம் 6-13 வரையான வகுப்புக்களைக்கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இன்று 520 மாணவர்களுடனும் 44 ஆசிரியர்களுடனும் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டிடத்தினுள் உள்வாங்கப்பட்ட பாடசாலையாக “கற்று நின்று ஒழுகு “ என்ற மகுடவாசகத்துடன் பட்டொளிவீசி பெருமை பெறுகின்றது.

எமது வித்தியாலயம் எமக்குக் கிடைப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் அப்போது சாவகச்சேரி தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் ஆவார். இந்த இடத்தில் இப் பாடசாலை அமைவதற்கு காரணமாக இருந்தவர் வரணிக் கிராம சபையின் தலைவரான அமரர் வீரகத்தியார் சிதம்பரநாதன் அவர்கள் ஆவார். இவ் இருவரது விடாமுயற்ச்pயின் பேறே காடாக இருந்த இடம் கலைக்கூடமாக மாற்றி அமைக்கப்பட்டு மாடாய் உழைத்து உழைத்து மடிந்து போகும் எம் மக்கள் மத்தியில் கல்வி மலர கலை ஞானம் ஒளி வீச பல்வேறு துறைகளிலும் பயன் பெருகும் வகையில் இவ் வித்தியாலயம் 1954ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவப்பட்டு கௌரவ கல்வி அமைச்சர் அமரர் M.D. பண்டா அவர்களினால் கோலாகலமாகத் திறந்து வைக்கபப்ட்டது.
பாடசாலையின் முதலாவது அதிபராக அமரர் C. கந்தையா அவர்கள் 1954 இல் இருந்து 1958 வரை கடமையாற்றினார். சூழலுக்கேற்பவும் காலத்தோடு ஒப்பவும் தன்னை ஆளாக்கிக் கொள்ளும் வல்லோன் ஆகிய இவ் அதிபரது அயராத உழைப்பினால் வித்தியாலயம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளரத் தொடங்கலாயிற்று.
அதனைத் தொடர்ந்து அமரர் C. இராசதுரை அவர்கள் 1959 தொடக்கம் 1961 வரை கடமையாற்றினார். திறமையும் தற்துணிவும் கொண்ட இவர் முன்னைய அதிபர் விட்டுச்சென்ற பணியை மென்மேலும் மெருகூட்டி விளங்கச் செய்தார். இவ் அதிபரின் நிர்வாகத் திறமையால் அக்கால ஆங்கிலக் கல்லூரிகளின் தரத்தையடையும் அளவிற்கு வித்தியாலயம் வளர்ச்சி அடையலாயிற்று. இவ் அதிபரது சேவைக் காலத்தில் மாணவர்கள் தாம் கடைப்ப்டிக்க வேண்டிய ஒழுக்கம் பண்பு முதலானவற்றின் பெரும் பகுதியை இவரிடம் இருந்தே கற்றனர் எனலாம்.
அடுத்து அமரர் M. கணேசன் அவர்கள் 1961 தொடகக்ம் 1964 வரை அதிபராகக் கடமையாற்றினார். இவரது பொலிந்த தோற்றமும், தெளிந்த சிந்தனையும், எதையும் நுணுகி ஆராய்ந்து அணுகும் ஆற்றலும் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தன. கடமையே கண்ணெனக் கருதிய இக்கரும வீரன் காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் கருத்தொருமித்துச் செயற்படும் மனப்பாங்கைப் பெற்றிருந்தனர். 1963ம் ஆண்டு மே மாதம் க.பொ.த சாதாரண வகுப்பில் விஞ்ஞானக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது இங்கு விஞ்ஞான ஆய்வுகூடமோ போதிய விஞ்ஞான வசதிகளோ இருக்கவில்லை. எனினும் அதிபரின் ஊக்கமும் ஆசிரியர்களின் உற்சாகமும் இங்கு விஞ்ஞானக் கல்வி வளர இடமளித்தன.
தொடர்ந்து அமரர் V. தங்கராசா அவர்கள் 1965 தொடகக்ம் 1970 வரை கடமையாற்றினார். முன்னைய அதிபர்களினால் விளையாட்டு மைதானம் கோரி எழுப்பப்பட்டு வந்த குரல் இவ் அதிபரது முயற்சியினால் பயனளித்தது. 1967ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வித்தியாலய வளவில் விசாலமான ஒரு விளையாட்டு மைதானம் கல்வி இலாகாவினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இப்போது வித்தியாலயக் கட்டிடங்களின் மத்தியிலே கம்பீரமாக காட்சி தரும் வணக்க மண்டபம் 1968ம் ஆண்டு யூலை மாதம் காலஞ்சென்ற உடையார் திரு. சிவா நல்லமாப்பாணர் அவர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. முன்னாள் வட மாகாண கல்வி அதிகாரி அமரர் S. தணிகாசலம் அவர்கள் திறந்து வைத்தமையும் நன்கொடையாளரது உருவப்படத் திரை நீக்கத்தைப் பாராளுமன்ற உறுப்ப்pனர் அமரர் V.N. நவரத்தினம் அவர்கள் நிறைவேற்றி வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும்.
இவரைத் தொடர்ந்து அமரர் ஊ. சிவப்பிரகாசம் 1970 இல் இருந்து 1972 வரை அதிபராகக் கடமையாற்றினார். வரணி மக்களில் ஒருவரான இவர் இவ் வித்தியாலய வளர்ச்சியில் கூடுதலான சாதனையை ஏற்படுத்த வேண்டுமென அவாக் கொண்டிருந்தார். பல கோணங்களில் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். பட்டதாரிகள், விசேட பயிற்சி ஆசிரியர்கள் எனப் பல துறை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். கடமைஇ கண்ணியம்இ கட்டுப்பாடு மிக்கவர். நீளப்பாவாடை சட்டைஇ தாவணி என்பதான சீருடையில் பெண் மாணவிகள் பொலிவுடன் விளங்கினர். அதேவேளை கற்பித்தலில் ஓர் எழுச்சி நிலை ஏற்பட்டதென்றே கூறலாம். பத்தொன்பதாக இருந்த ஆசிரியர் தொகை இருபத்து நான்காக மேலும் உயர்ந்தது. இவரது பதவிக்காலத்தில் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த கௌரவ கல்வி அமைச்சர் டாக்டர் அல்லாஹ் பதியுத்தீன் மஹமுத் அவர்களுக்கு எமது வித்தியாலயத்திலும் ஒரு வரவேற்பளிக்கபப்ட்டது. அன்றைய தினம் கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள் நாட்டிய அடிக்கல்லின் விளைவே இன்று எம் வித்தியாலயத்தில் காணபப்டும் விஞ்ஞான ஆய்வுகூடமாகும்.
இதனைத் தொடர்ந்து அப்போது உப அதிபராக இருந்த T. காசிநாதன் அவர்கள்
1972 தொடக்கம் 1973 வரை அதிபராக கடமையாற்றி வருகையில் அமரர் N.முத்துலிங்கம் அவர்கள் 1973 தொடக்கம் 1974வரை அதிபராகக் கடமையாற்றினார். கடந்தகால அதிபர்களில் விளையாட்டுத் துறையில் அதிக அக்கறை செலுத்திய அதிபர் இவராவார். அமைதியானவரும் சாந்தகுணம் உடையவருமான இவ் அதிபர் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் மேம்பட வேண்டுமென்று செயலாற்றி வந்ததோடு நிறைவும் பெற்றார்.
இவரைத் தொடர்ந்து அமரர் S.N. இராஜநாயகம் அவர்கள் 1974 தொடக்கம் 1975 வரை அதிபராகக் கடமையாற்றினார். அப்போது நடைமுறையில் இருக்கும் கல்வித் திட்டங்க்ளைப் பற்றிய பூரண தகவல்களைச் சேகரித்துக் கொள்ளும் திறமை வாய்ந்த இவ் அதிபர் ஆசிரியர்களின் கற்பித்தல் தொழிலிற்கு உறுதுணையாக இருந்தார்.இதனால் கற்பித்தல் மேலும் சிறப்படையத் தொடங்கியது . மாணவர்கள் தொகையும் கூடலாயிற்று. புதிய முறைக் கல்விக்கு ஏற்ப முதலாம் வகுப்பறை ஒன்றை பெற்றோர்கள் நிர்மாணித்துக் கொடுத்து வைத்த பெருமை இவ் அதிபரையே சாரும்.
அடுத்ததாக அமரர் A. தங்கராசா அவர்கள் 1975 தொடக்கம் 1976 வரை அதிபராகக் கடமையாற்றினார். இவரின் சேவைக்காலம் ஒரு வருடமாக இருந்தாலும் க.பொ.த உயர்தர வகுப்ப்னை ஆரம்பித்து உயர் வகுப்பு மாணவர் கல்விக்கும் பெரிதும் உதவிய அதிபராவார்.
இவரைத் தொடர்ந்து அதிபர் பொ. கந்தையனார் அவர்கள் 1976 தொடக்கம் 1983 வரை அதிபராகக் கடமையாற்றினார். இவர் தமிழ் பணடிதர்இ இலக்கண இலக்கியம் கற்பிப்பதில் மிகவும் ஆழமானவர். திடமான உயர்ந்த தோற்றம்இ அமைதியான பார்வைஇ கம்பீரமான நடைஇ அழகான பேச்சு என்பன அவரின் சிறப்ப்pயல்புகள் “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை….” என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க எடுத்த கருமத்தை முடிக்கும் ஆற்றலுடையவர். ஏனைய அதிபர்களுக்கு கிடைக்காத பெரும்பேறு 1979ம் ஆண்டிலே வெற்றி விழா கொண்டாட இவருக்குக் கிடைத்தது.
தொடர்ந்து அமரர் R. வல்லிபுரம் அவர்கள் 1983 தொடக்கம் 1987 வரை அதிபராகக் கடமையாற்றினார். ஆங்கில அறிவுள்ளவர். மாணவர்களுக்கு நன்முறையில் ஆங்கில கல்வியைப் புகடடி வித்தியாலய வளர்ச்சிக்கு காத்திரமான பங்களி பை வழங்கியிருந்தார்.
இவரைத் தொடர்ந்து பதவியினை ஏற்றுக்கொண்ட அமரர் திரு.R.துரைராசா அவர்கள் 1987 தொடக்கம் 1998 வரை அதிபராகக் கடமையாற்றினார். இவருடைய காலம் பாடசாலை வளர்ச்சியில் திருப்பு முனையாக அமைந்தது. ஆளுமையின் சின்னம் என்று கூறும் அளவிற்கு தென்மராட்சி கல்வி வலயத்தில் சிறந்த அதிபராகப் பணியாற்றினார். இலக்குகளை திட்டமிட்டு செயலாற்றுபவர். துணிவும்இ ஆற்றலும்இ நிர்வாக அனுபவமும் மிக்கவர். கல்விசார் நடவடிகiககள் ஆயினும் சரி தொழில்சார் நடவடிக்கைகள் ஆயினும் சரி பிற துறை எதுவாயினும் சரி தன் விடாமுயற்ச்pயினால் உயர்வு கண்டு வெற்றியை நிலைநாட்டியவர். கல்வியில் தீவிர முயற்ச் காரணமாக பல்வேறு வழிகளில் பல்துறை ஆற்றல் மிக்க ஆசிரியர் குழாமை உள்வாங்கி 1990ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரே தடவையில் 19 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று பாராட்டுப் பெற்றது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியதாகும். 1993ம் ஆண்டு தமிழ்மொழி தின சிறுகதைப் போட்டியில் தேசிய மட்டம் சென்று சாதனை படைத்தது.
பாடசாலை வலைப்பந்தாட்ட குழு யாழ் மாவட்டம் சென்று வெற்றியீட்டியது. 1996ல் நாட்டு நிலைமை மிக நெருக்கடியான காலகட்டத்தில் இவ் வித்தியாலயம் இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆறுதல் அளித்தது. அக் காலகட்டத்திலும் தன் தளராத முயற்ச்யால் பாடசாலை உடைமைகள்இ ஆவணங்கள் என்பவற்றை முடிந்தவரை பாதுகாத்து கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தியவர். கொத்தணி அதிபராக இருந்து ஊட்டப் பாடசாலைகளின் தேவைகளை அறிந்து வளங்களைப் பகிர்ந்தளித்து கற்றல் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்தவர்.
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஒன்றுகூடல் நிகழ்வை வருடந்தோறும் நடாத்தி பல்கலைக்கழக பேராசிரியர்களை வரவழைத்து மாணவர்களை நல்வழியில் வழிப்படுத்தியவர். காடுகளாகக் காட்சியளித்த மைதானத்தை புணரமைபபுச் செய்தவர். மைதானத்தின் தெற்குப் புறத்தில் ஒரு மணி மண்டபம் உருவாகுவதற்கும் முன்னின்று உழைத்தவராவார்.
தொடர்ந்து 1998 தொடக்கம் 2003 வரை அதிபராக இருந்த E.நவரட்ணராஜா அவர்கள் பாடசாலையின் வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர். புரட்சிகரமான சிந்தனைகளை தன்னகத்தே கொண்டவர். ஆசிரியப்பணி மூலம் அவரது பெயர் நிலைத்திருந்தாலும் அதிபர் பதவியில் அவரது சேவை பெரிதும் போற்றுதலுக்குரியது. கற்றல் செயற்பாடு முழுமை பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் கற்பித்தல் உபகரணப் பயன்பாட்டை வலியுறுத்தியவர். வகுப்புகள் தோறும் பக்கபபுரட்டியினை காட்சிபப்டுத்தும் பலகை அமைப்பித்தவர். பாட ரீதியான மன்றங்களை உருவாக்கியவர். இதன் மூலம் மாணவர்களின் அடைவு மட்டம் உயர்ந்தது. பாடசாலை மைதானத்தின் விஸ்தரிப்புக்கு காத்திரமான முயறச்களை எடுத்து யாழ் மாவட்டத்திலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய பாரிய விஸ்த்ரணம் கொண்ட மைதானத்தைக் கொண்ட ஒரு பாடசாலையாக இவ் வித்தியாலயத்தை உருவாக்கியதுடன் சிறுவர் பூங்காஇ தொங்கு பாலத்தையும் அமைத்தார்.
க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களின் குழுச் செயற்றிட்டத்தில் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று 80000 ரூபா நிதி சேகரிக்கப்பட்டு புத்தகஙக்ள் கொள்வனவு செய்து நூலகப் பாவனையை அதிகரிக்கச் செய்தனர். பௌதீக வள விருத்தியில் முன்புறத்தே அமைந்துள்ள மதில் பாடசாலையின் தெற்கே இரு மாடிக் கட்டடங்களைக் கொண்டு விளங்கும் செயற்பாட்டு அறை, ஒலி, ஒளி சாதனகூடம், விவசாயகூடம், கணினிப் பயன்பாடு போன்றன உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர். இடப்பெயர்வு ஏற்பட்டு சமூக மாற்றம் இப் பாடசாலையை பாதித்த போதிலும் பேச்சு வன்மையால் தனது கடமையை செவ்வனே ஆற்றி வந்தார். இப் பாடசாலைக்கு மகிழ்ச்சிகரமான மேலைத்தேய வாத்தியகுழு (BAND) ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அவாவினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமரர்
ந.ரவிராஜ் ஊடாக பெற்றுக்கொள்ள உதவினார். இவ்வாறாக மிகுந்த அர்பணிப்புடனும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பாடசாலையின் அபிவிருத்தியிலும் பங்கு கொண்டு செயற்பட்டமை அவரது திறமைக்கும், ஆளுமைக்கும் தக்க சான்றுகளாக விளங்குகின்றன.
இதனைத் தொடர்ந்து திரு செ.சுப்ப்ரமணியம் அதிபர் அவர்கள் 2003 தொடக்கம் 2007 வரை அதிபராகக் கடமையாற்றினார். அன்பு, பணிவு, பொறுமை என்ற நற்பண்புகள் இயல்பாகவே இவரிடம் குடி கொண்டிருந்தன. மற்றவரின் மனதைப் புண்படுத்தும் வார்த்தைகள் அவரது நாவிலிருந்து ஒருபோதும் வருவதில்லை. குருளைச் சாரணர் செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டினார். GTZ நிறுவனத்தின் உதவியுடன் மலசலகூடம் அமைப்பதற்கு முன்னின்றவர். பாடசாலை முகாமைத்துவத்தில் ஆவணபப்டுத்தலை செம்மையாக மேற்கொண்டு நிர்வகித்தவர்.
க.பொ.த சாதாரண தரம், உயர்தர வகுப்புக்களில் பெறுபேறுகள் அதிகரித்துக் காணபப்ட்டன. 2004 பொன்விழா எடுக்கபப்ட்டு அதில் வெளியிடப்பட்ட பொன்விழா மலர் பாடசாலை வரலாற்றுக்கு தக்கதோர் சான்றாவதோடு அதிபரின் மேன்மையையும் காட்டி நிற்கின்றது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் திரு. ந.நவரட்ணராஜா அவர்கள் 2008 தொடக்கம் 2011 வரை அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப் பகுதியில் மகிந்த சிந்தனையில் உதித்த “இசுறு” திட்டம் சிட்டிவேரம் அம்மன் அருளினாலும் வலயக்கல்வி பணிப்பாளர் திரு. K.பிரேமகாந்தன் அவர்களின் சிபாரிசினாலும் அதிபரின் முயற்சியாலும் தென்மராட்சியில் எமது பாடசாலை இசுறு பாடசாலை என்ற பெருமையை பெற்றுள்ளது. இசுறு பாடசாலை ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் பல மாற்றங்களை உருவாக்கி சாதனை படைக்க வேண்டுமென முழங்கினார். அந்த வகையில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆங்கில கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். மாணவர்களின் சீருடை, சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, கழுத்துப்பட்டி, அப்பியாசக் கொப்பிகளின் மட்டை என்பவற்றை மாற்றத்துக்கு உள்ளாக்கினார். வகுப்பறைக்கு ஆசிரியர் சென்று கற்பிக்காமல் “Department System” என்ற புதிய திட்டத்தினை உருவாக்கினார். இதன் ஊடாக ஒரே பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கற்பிக்கும் நிலை உருவானது. அவரது காலப்பகுதியில் பாடசாலையின் கல்வி மேம்பாடு பௌதீக வளங்கள் என்பனவும் அதிகரித்துக் காணப்பட்டதோடு 2008 இல் 5 மாணவர்கள் 3A சித்தி பெற்று சாதனை படைத்தனர். இவ்வாறு பல்வேறு வகையான செயற்றிட்டங்களை முன்னெடுத்து சிறப்பான முறையில் ஆற்றிய பணிகள் யாவரும் அறிந்ததே.
2011 தொடக்கம் 2016 வரை திரு க. மங்களேஸ்வரன் அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இவர் அதிபராக இருந்த காலத்தில் பாடசாலை மேலும் வளர்ச்சி பெற்றது. இக் காலகட்டத்திலேயே எமது பாடசாலை 1000 பாடசாலை திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டதுடன் பாடசாலை 1AB ஆகத் தரமுயர்த்தபப்ட்டதோடு 2012 இல் கணித, விஞ்ஞான, வர்த்தக பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. சுற்றுமதில் அமைக்கப்பட்டது. இரண்டு மாடிக்கட்டிடம்இ நீர்த்தாஙக் பூர்த்தி ஆக்கப்பட்டது. துவிச்சக்கரவண்டித்தரிப்ப்டம் அழகான முறையில் அமைக்கபப்ட்டுள்ளது. குழாய் நீர் விநியோகம் சீர் செய்யபப்ட்டது. மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம், பாடசாலை முன்வாசல் அமைப்புக்கள், மூன்று மாடிக்கட்டிடம்இ சுவர்ப் பூச்சு வேலைகள் என்பன பூர்த்தியாக்கபப்ட்டு பாடசாலை புதுப்பொலிவுடன் திகழ்ந்தது. இவரது காலப்பகுதியில் பாடசாலையின் கல்வி மேம்பாடு, பௌதீக வளங்கள் என்பனவும் அதிகரித்துக் காணப்பட்டதோடு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்திலும் சித்தி வீதம் அதிகரித்து காணப்பட்டது. இவரது காலப்பகுதியிலே குறிப்பாக 2014ம் ஆண்டு வைரவிழா கொண்டாடப்பட்டது சிறபபுக்குரியதாகும்.
தொடர்ந்து 2016 தொடக்கம் 2022.06.05 வரை ப.செல்வ விநாயகம் அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இவரது காலப்பகுதியில் மூன்று மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கு உள்வாங்கப்பட்டனர்.
இவரைத் தொடர்ந்து திரு ஆ. தங்கவேலு அவர்கள் 10.06.2022 தொடக்கம் இன்று வரை அதிபராகக் கடமையாற்றி வருகின்றார். தன்னம்பிக்கைஇ சுறுசுறுப்புஇ ஆர்வம்இ தியாக மனப்பாங்கு, திடசங்கற்பம் ஆகிய நற்பண்புகளை உடையவராதத் திகழ்கின்றார். இவர் பதவியேற்று குறுகிய காலப்பகுதியே ஆகின்ற போதிலும் இப் பாடசாலை ஆனது கல்வியிலும் சரி புறக்கிருத்திய செயற்பாட்டிலும் சரி பௌதீக வள அபிவிருத்தியிலும் சரி துரித கதியில் வெற்றி வாகை சூடி வருவது யாவரும் அறிந்ததே.
தற்போதைய அதிபரது காலத்தில் கல்விச் செயற்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களாக மூன்று திறன் வகுப்பறை உபகரணத் தொகுதி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டதோடு இரண்டு திறன் வகுப்பறை உபகரணத் தொகுதி கல்வி அமைச்சின் GEM Project ஊடாக அமைக்கப்பட்டு நவீன கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் கற்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல Multi Media உபகரணத் தொகுதி ஒன்று பழைய மாணவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டு புவியியல் பாடத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இணைபாடவிதான செயற்பாடுகளில் பங்கு பற்றும் மாணவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். இதனால் இச் செயற்பாடுகளில் தற்போது மாணவர்கள் பங்குபற்றும் வீதம் அதிகரித்துள்ளது. மேலும் தரம் 13 க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தால் முதன்முறையாக நடாத்தப்பட்ட இந்து நாகரீக வினாடி வினாப் போட்டியில் மாகாணமட்டம் வரை சென்று முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அடுத்து விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களாக அதாவது 2022 வலயமட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பழைய மாணவர்களினால் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பெருவிளையாட்டு மாகாணமட்டப் போட்டியில் பங்குபற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து செலவு பழைய மாணவர்களினால் வழங்கப்பட்டது. அத்துடன் சதுரங்கப் போட்டியில் 20 வயதுப் பிரிவினர் தேசிய மட்டம் வரை சென்றிருந்தனர்.
இப்பாடசாலையின் பிரதான கட்டிடற் தொகுதியானது பழையமாணவர்களின் பங்களிப்புடனும் நலன்விரும்பிகளின் பங்களிப்புடனும் 25 இலட்சம் ரூபா செலவில் புணரமைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு 17.05.2023 கையளிக்கப்பட்டது. மேலும் 20.07.2023 அன்று சாவகச்சேரி லயன் கழகத்தின் நிதியுதவியால் 200000 ரூபா செலவில் மைதானத்திலுள்ள மலசலகூடம் திருத்தி அமைக்கப்பட்டது. மேலும் தனியொரு மாணவரின் நிதிப்பங்களிப்பினால் அகலமானதும் விசாலமானதுமான சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது.
மேலும் இன்றய காலத்தில் தகவல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இப்பாடசாலைக்கு ஜனவரி.2023 இணையத்தளம் உருவாக்கப்பட்டு இயங்கிவருவதுடன் “School Management System” (SMS) என்கிற Software
இவரது காலத்திலே இப்பாடசாலைக்கு அறுமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறாக இவ் அதிபரது காலத்தில் பாடசாலையானது துரித வளர்ச்சி கண்டு கொண்டிருக்கின்றது. தொடர்ந்து இவ் அதிபரது காலத்தில் பாடசாலையானது சிறப்புற்றோங்கும் என்பதில் ஐயமில்லை.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கூற்றுக்கிணங்க யா/ வரணி மத்திய கல்லூரி ஆனது கிராமப்புற பாடசாலையாக இருந்தாலும் நகரப்புற பாடசாலையாக வளர்ச்சியடைந்து வருகின்றதென்றால் இக் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், நலன் விரும்பிகள் போன்றோர் தோளோடு தோள் நின்று உழைப்பதன் பேறே ஆகும்.
வாழ்க வரணி மத்திய கல்லூரி!
வளர்க மென்மேலும் அறிவு!
மலர்க எம் சிறார்கள் கல்வி!

0

Teachers

0

Students

0

Old Students

0

Clubs

VISION

அறிவும், ஆக்கமும் ஆளுமைத்திறனும், மானிடப்பண்பும் மிளிரும் வகையில்
உள்ளத்து இலட்சியங்களைக் கொண்ட உயர் கல்லூரியாக உருவாக்குவோம்

MISSION

சமகால, எதிர்கால கல்வித்தேவைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நிறைவு
செயயும் வகையில் விளைதிறன் மிக்க வளங்களைக் கொண்டு தலைசிறந்த
கல்லூரியாக உயர்ந்து இப்பிரதேச மக்களது மகிழ்ச்சிகர வாழ்விற்கான
செயற்பாடுகளை வினைதிறனுடன் முன்னெடுத்தல்.