கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது கல்லூரியின் அதிபர் தலைமையில் 25.02.2025 அன்று இடம்பெற்றது.நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும் வெளிவிவகார அமைச்சு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் சிரேஸ்ட உதவிச் செயலாளருமாகிய திரு.க.நிகரில்காந் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.














