கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான பரிசில் நாள் நிகழ்வும், “வருணி” வருடாந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் 24.01.2025 அன்று பிரதி அதிபர் திரு . தெ. செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது .இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் மதிப்பார்ந்த திரு. லட்சுமணன் இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கடந்த வருட கல்லூரியின் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கடந்த ஆண்டின் கல்லூரி நிகழ்வுகளின் தொகுப்பான “வருணி” வருடாந்த சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.