ஒவ்வொரு தவணையும் தவணைப்பரீட்சை நிறைவடைந்த பின்னர் இடம்பெறும் தேர்ச்சி அறிக்கை வழங்கப்படும் நிகழ்வில் குறித்த தவணையில் வகுப்பு ரீதியாக அதிஉயர் சராசரிப்புள்ளி பெறும் மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். இந்நிகழ்விற்கான பூரண அனுசரணையை கல்லூரியின் 2007O/L & 2010A/L பழையமாணவர் அணியினர் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை பரீ்ட்சை நிறைவுற்று அதற்கான தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு 20.01.2025 கல்லூரியின் பிரதி அதிபர் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் தவணைக்கான சிறப்பு தேர்ச்சி சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.இந்நிகழ்வானது மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது ஏனெனில் சில வகுப்புக்களில் ஒவ்வொரு தவணையிலும் இவ்விருதை வெவ்வேறு மாணவர்கள் தமதாக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில் அவ் அணியினருக்கு கல்லூரி சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
![](https://varanycentralcollege.lk/wp-content/uploads/2025/01/IMG_4894.jpeg)