2023 ஆம் ஆண்டிற்கான தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் யா / வரணி மத்திய கல்லூரி மைதானத்தில் 30.06.2023,01.07.2023,02.07.2023 தினங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று இறுதி நாள் நிகழ்வு 04.07.2023 அன்று தென்மராட்சிக்கல்வி வலய வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.த.கிருபாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் வடமாகாண உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.இ.இராஜசீலன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
இப் போட்டிகளில் எமது கல்லூரி வீர, வீராங்கனைகளின் திறன் மிகு பங்களிப்பினால் ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் வலயமட்டத்தில் எமது கல்லூரி இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டமை பெருமைக்குரிய விடயமாகும்.
- எமது கல்லூரி வீர,வீராங்கனைகளின் சாதனைத்தடயங்கள்:
பெயர் | வயதுப்பிரிவு | நிகழ்ச்சி | நிலை |
1.S.பபிராஜ்
2.S.பானுசன் 3.P.திஷாந்
4.S.கர்ஜித்
5.M.மதியுகன் 6.S.சாண்டீபன்
7.J.ஜெனுசன்
8.S.தாதுலன் 9.K.டனுசியன்
10.R.திஷிகன்
11.S.கனுசா 12.K.அகிஷா 13.K.கம்சிகா 14.I.இந்துஜா 15.K.கௌசினி 16.I.அபினயா
17.M.மதுமிதா 18.M.மதிசாயினி 19.S.சாரணியா 20.S.அனிற்றா 21.S.நிமேஷா
22.B.கம்சிகா
23.K.ஆர்மிதா
24.S.உஷாந்தினி 25.R.ரதீசனா 26. K.நமீதா 27.V.வேனுகா
|
12 B
14 B 14B
16B
18B 18B
18B
18B 20B
20B
12G 12G 14G 16G 16G 16G
16G 16G 18G 18G 20G
20G
20G
20G 20G 20G 20G 12Girls 20 Girls
12 Boys 20 Boys 18 Boys |
60m race 100m race
80m Hurdles 80m Hurdles
Discuss throw Shot put
800m race Triple jump High jump
1500m race 400m Hurdles
Shot put 800m race
Shot put Discuss throw
Long jump High jump High jump 800m race 300m Hurdles High jump 200m race
200m race Shot put 400m Hurdles 800m 200m race 100m race 400m race 200m race 100m Hurdles Triple jump 400m race Javelin throw Javelin throw 100m Hurdles 800m race 4 x 50m 4 x 100m 4 x 400m 4 x 50 m 4 x 400 m 4 x 400 m |
முதலாம் இடம் முதலாம் இடம்
இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம்
இரண்டாம் இடம் முதலாம் இடம்
இரண்டாம் இடம் முதலாம் இடம்
முதலாம் இடம் முதலாம் இடம்
முதலாம் இடம் மூன்றாம் இடம் மூன்றாம் இடம் முதலாம் இடம் முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
இரண்டாம் இடம் மூன்றாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம் முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம் முதலாம் இடம் இரண்டாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் மூன்றாம் இடம் முதலாம் இடம் முதலாம் இடம் முதலாம் இடம் மூன்றாம் இடம் இரண்டாம் இடம்
|
இம் மாணவர்களையும்,இவர்களைப் பயிற்றுவித்த உடற் கல்வி ஆசிரியை திருமதி விநோதா கேதீஸ்வரன்,பயிற்றுவிப்பளர் திரு.ஆல்தோ அவர்களுக்கும் ,இவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான விளையாட்டு உபகரணங்களையும்,ஏனைய சகல உதவிகளையும் ,ஆதரவுகளையும் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கல்லூரிச் சமூகத்தின் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு ,தொடர்ந்து நடைபெறவுள்ள மாகண மட்ட போட்டிகளிலும் இம் மாணவர்கள் தமது சாதனைத் தடயங்களைப் பதிக்க எமது வாழ்த்துகள்.